Monday, October 26, 2015

இதயம்

அவன் அழகை ரசிக்க
நான் அழகு இல்லை

என் அன்பை நேசிக்க அவனிடம்
இதயம் இல்லை .......................

அத்தனையும் உள்ளது அவளை தவிர..,

உடைத்து போன வளையல்..,

தவறி விழுந்த ஹேர் கிளிப் ..,

அவள் முகம் துடைத்த கைக்குட்டை ..,

மை தீர்ந்த பேனா..,

என அத்தனையும் இருக்கிறது என்னிடம் 

மறந்து ரசிக்கிறேன்

நீ பேசிடும் வார்த்தைகள் ஓவவொன்றையும்

ரசிக்கிறேன்

என் காதலை மறுத்து நீ சொன்ன பதிலையும் சேர்த்து

என் காதலை நீ மறுக்கிறாய் என்பதை மறந்து

என்றும் என்னை மறந்து விடாதே

என் பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது...!!
சில நேரம் வெட்கப் புன்னைகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!!!!

உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கண்ணீர் வடிக்கிறது! என் பேனா!!
சட்டையின் பையில் நீல நிறமாய்..!!!!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!!!

அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
என் இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு..!!!!
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!!!!

உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புது புது வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது...!!

வண்ணங்களை வகைப்படுத்த
நாசாவின் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!!!

வாரம் சென்ற பின்னும்
தனக்கான வரிகள் மட்டும்

இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே!
என் நண்பன்..!!!!

அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி வார்த்தை கண்ணீருடன்
என்றும் “ என்னை மறந்து விடாதே  heart

ஒற்றை ரோஜா

பிரியமானவர்களிடம் எல்லாம்
விடைபெற்றுக் கொண்டேன்
ஓர் நாள்
ஒற்றை ரோஜாவோடு
உனைப் பார்க்க வந்தேன்
அந்த ரோஜா
உனக்காக மலர்ந்ததல்ல
என்று நீ மறுதலித்தாய்
வருத்தத்துடன் நான்
விடைபெற்றுச் சென்றேன்
உனது பார்வைகள் தான்
பல்கலைக்கழகத்தில்
எனைப் பட்டம் வாங்க
வைத்தது
அந்த தேவதையை வாழ்வினிலே
தொலைத்தேன்
இதயத்தைப் பறித்துக் கொண்ட
அவள்
இரக்கமற்றவளாய் இருந்தாள்
அன்று ரோஜாவை
ஏற்க மறுத்த அவள்
இன்று
மலர் வளையத்தோடு வந்து
உட்கார்ந்திருந்தாள்
என் சடலத்தின் அருகில்.

மௌனம்

உன்னை சந்திக்கும்
தருணமெல்லாம்
வழிதவறும்
என் வார்த்தைகள்
கவிதையாய் வந்து
என் காகிதம்
நிறைக்கிறது
நீ போன பின்பு.

இதயம்....

நீ கடைக்கு போகும் அழகில்

தானாகவே போய் அமர்ந்து கொள்கிறது

என் இதயம் நீ எடுத்துச்செல்லும் கூடையில்.....!